Thursday 13 November 2014

ஆன்லைன் போராளி

எங்க ஆஃபீஸ் உள்ள நுழைஞ்சதுமே மரத்தில செஞ்ச பிள்ளையார் சிலை ஒண்ணு இருக்கும். தினமும் காலையில பூ மாலை வாங்கிப் போடுறது ஆஃபீஸ் அஸிஸ்டெண்ட்டோட வேலை. இன்னைக்கு காலையில நான் பார்க்கும் போது மாலை தனியே கேரிபேக்ல இருந்தது. சரின்னு மாலைய எடுத்து பிள்ளையாருக்கு போடப்போனேன்.

எங்கயிருந்தோ வேகமா ஓடி வந்த ஆஃபீஸ் பாய்மேடம்...மேடம்....இருங்க...பிள்ளையார தொடக்கூடாதுன்னு சார் சொல்லிட்டு போயிருக்கார்

என்னது தொடக்கூடாதா? ஏன் தொடக்கூடாது?”

தெரியாது மேடம்...யாரும் பிள்ளையார தொடக்கூடாதுன்னு இப்ப தான் சார் சொல்லிட்டுப் போனாரு

”என்னது சாமி சிலைய தொடக்கூடாதா? ஆஃபீஸ்ல வேலை செய்ய மட்டும் நாமல்லாம் வேணும்...ஆனா சாமி சிலைய தொடக்கூடாதா?”

அவ்ளோ தான்...எனக்குள்ள ஆஃப்லைன்ல இருந்த அத்தன  போராளிங்களும் ஆன்லைன்ல வந்து போக் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க.... அப்போ தான் என்னை ஆன்லைபோராளியா நெனைச்சேன்...ஆன்லைன் போராளியா நின்னேன்...ஆன்லைன் போராளியாவே மாறுனேன்.

”யார்ர்ர்ர்ரப்பார்த்து பிள்ளையார தொடக்கூடாதுன்னு சொன்ன...இப்ப பாரு”ன்னு மனசுல நெனைச்சுக்கிட்டே ..மாலைய கைல எடுத்து பிள்ளையாருக்கு போட்டுட்டு அதே கோவத்தோட திரும்பப்போனேன்..

டொம்னு ஒரு சத்தம்...திரும்பிப் பார்த்தா பிள்ளையாரோட தும்பிக்கை கீழ கிடந்தது.... அவ்வ்வ்வளவு கோவமாவா மாலைய போட்டோம்னு ஷாக்காகி நின்னேன்.

வெளிய போயிருந்த ஆஃபீஸ் அட்டெண்டெண்ட் அப்போ தான் உள்ள வந்தாரு.....

”திரும்பவும் உடைஞ்சு விழுந்திருச்சா

திரும்பவுமா?...அப்ப ஏற்கனவே உடைஞ்சு தான் இருந்திச்சா?”

ஆமா மேடம். சும்மா மேல வச்சுட்டு அதை ஒட்ட வைக்க தான் ஃபெவிக்கால் வாங்கப்போனேன்...டேய்...உங்கிட்ட யாரும் தொடக் கூடாதுன்னு சொல்லிட்டு தான போனேன்ன்னு ஆஃபீஸ் பாய பார்த்து கேட்டாரு...

நான் சொன்னேன் சார் ...மேடம் தான் கேக்கல...”


அப்பாடா......சரி சரி...எம்.டி வரதுக்குள்ள கரெக்டா ஒட்டி வைங்கன்னு சொல்லிட்டு மீ எஸ்கேப்ப்.....

No comments:

Post a Comment