Tuesday 25 November 2014

சிக்கன் கொத்து பரோட்டா

ஹோட்டலுக்குப் போயிருந்தோம். செம பசி. எல்லா டேபிளும் ஃபுல்லா இருந்தது. .நாலு பேர் உக்காரக்கூடிய டேபிள்ல ஒரு ஹஸ்பண்ட் வைஃப் பக்கத்து பக்கத்துல உக்கார்ந்து சாப்பிட்டுட்டு இருந்தாங்க.

எதிர் வரிசை சீட் ரெண்டும் காலியா இருந்ததால அவங்க கிட்ட கேட்டு யாரும் வரலைன்னு கன்ஃபர்ம் பண்ணிட்டு உக்கார்ந்தோம். ஆர்டர் சொல்ல ஆளைத் தேடினா அவர் பிஸியா அங்கிட்டும் இங்கிட்டும் ஓடிட்டு இருந்தாரு.

இங்க கொத்து பரோட்டா சூப்பரா இருக்கும்னு கேள்விப்பட்டதால அதையே ஆர்டர் பண்ணலாம்னு முடிவு பண்ணியிருந்தேன். "வயிறு வேற பசிக்குது. ஆர்டர் வாங்க ஆளைக் காணோமே"ன்னு சத்தமா சொல்லிட்டு இருந்தேன்.

எதிர் சீட்ல இருந்த லேடி நான் பேசுறதக் கேட்டு லேசா சிரிச்சாங்க. நானும் பதிலுக்கு சிரிச்சதும் "இந்த ஹோட்டல்ல ஆர்டர் குடுக்குறது தான் கொஞ்சம் கஷ்டம். மத்தபடி சாப்பாடு எல்லாம் சூப்பரா இருக்கும்"னு சொல்லிட்டே சாப்பிட்டுட்டு இருந்தாங்க.

ஒரு வழியா ஆர்டர் வாங்குறவரைக் கூப்பிட்டு சிக்கன் கொத்து பரோட்டா ஆர்டர் சொன்னா அது இல்லைன்னுட்டார். சரின்னு அரை மனசோட வேற ஆர்டர் பண்ணிட்டு வெயிட் பண்ணிட்டு இருந்தோம்.

"நான்ஆசைப்பட்டு சாப்பிடலாம்னு நெனைச்சு வந்தேன் .......சிக்கன் கொத்து பரோட்டா இல்லையே. இப்போ ஆர்டர் எடுத்துட்டு போய் எப்ப கொண்டு வருவாய்ங்களோ"ன்னு இவர் கிட்ட பொலம்பிட்டு இருந்தேன்.

எதிர்ல உக்கார்ந்திருந்த லேடி அவங்க ஆர்டர் பண்ணி வாங்கி வச்சிருந்த சில்லி பரோட்டாவை அப்போ தான் சாப்பிட ஆரம்பிச்சவங்க ,அந்த பிளேட்டை என் பக்கம் லேசா நகர்த்தி இதை சாப்பிடுங்க. நல்ல டேஸ்ட்டா இருக்குன்னு சொல்ல,

நான் ரொம்பப் பெருந்தன்மையா "அய்யய்யோ பரவால்ல மேடம். நீங்க ஆசைப்பட்டு ஆர்டர் பண்ணிருப்பீங்க. நீங்களே சாப்பிடுங்க"ன்னு சொல்லவும் ஒரு செகண்ட் முழிச்சுட்டு அப்புறம் "இல்லங்க இதை ஆர்டர் பண்ணி சாப்பிடுங்கன்னு சொன்னேன்"னு சொல்லிட்டு கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கிக்கிட்டாங்க. நான் அசடு வழிஞ்சுட்டே

"ஹிஹி"

### என்னம்மா இப்டி பண்றீங்களேம்மா

1 comment:

  1. இப்படித்தான் ஒருதடவை நண்பரும் நானும் ஒரு வேலை விஷயமா ஒரு நிறுவனத்திற்கு சென்றோம் ... எங்களைப் பார்த்ததும் அந்த நிறுவன மேலாளர் அங்கிருந்த ஒரு பணியாளரிடம் ரெண்டு காப்பி எடுத்துட்டு வாங்கன்னு சொல்ல .... என் நண்பரோ அவசரப்பட்டு ஐயோ வேண்டாங்க நாங்க இப்பதான் வெளியில குடிச்சிட்டு வந்தோம்னு சொல்ல ... அதற்கு மேலாளர் நான் உங்களை சொல்லலங்க ''ஜெராக்ஸ் காப்பி'' எடுத்துட்டு வர சொன்னேன் என்று சொல்ல என் நண்பரின் முகத்திலும் உங்கள் முகத்தில் வழிந்த அதே அசடு ...''ஹிஹி ''

    ReplyDelete