Monday 22 June 2015

அகத்தியர் மருத்துவக் குறிப்பு

இன்னைக்குக் காலையில "Z"தமிழ் டீ.வியில ஒரு மூலிகை மருத்துவ நிகழ்ச்சியில வல்லாரையையும், பொன்னாங்கண்ணியையும் அரைக்க சொல்லிட்டு இருந்தாங்க. சரி எதுக்குன்னு பார்ப்போமேன்னு கொஞ்ச நேரம் கவனிச்சுட்டு இருந்தேன். மேலே சொன்ன ரெண்டு மூலிகை இலைகளையும் சுத்தம் பண்ணி அரைச்சுட்டு அந்தக் கலவையில, நைஸா அரைச்ச மிளகு ஏலக்காய்,அன்னாசிப்பூவைச் சேர்த்து அதில பசுநெய் மிதக்க மிதக்க ஊத்திக் கிளறி அதுக்கும் மேல ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து நல்லா கலக்கிட்டு அந்தக் கலவையை அப்படியே அடுப்புல வச்சு கிளறிட்டு இருந்தாங்க.
அப்போ அந்த மூலிகை மருத்துவர் ஒரு பாடல் வரிகளைச் சொல்லி அது அகத்தியர் எழுதிய மூலிகைக் குறிப்புன்னும் அதை யாருக்கும் சொல்லக்கூடாதுன்னு எழுதி வச்சுட்டுப் போயிருக்கதாகவும் சொன்னாரு. யாருக்கும் தெரியக் கூடாதுன்னா அப்புறம் எதுக்கு எழுதி வைக்கணும்னு புரியல. அதைவிட இன்னொரு விஷயம் என்னன்னா அதை யாருக்கும் சொல்லக்கூடாதுன்னு அந்த நிகழ்ச்சியிலயே ஏன் சொல்றாங்கன்னும் புரியல. (அதனால நானும் இத சொல்லல. நீங்களும் கேக்கல. நானும் மறந்துட்டேன். நீங்களும் மறந்துடுங்க ஃப்ரெண்ட்ஸ் wink emoticon )
ஆங்ங் .... அடுப்புல அந்தக் கலவையைக் கிண்டிக்கிட்டே இருந்தாங்கல்ல.... அதோட சீனியச் சேர்த்தாங்க. அதுவும் கொஞ்சமா இல்ல. அதிகமான அளவு இனிப்பு தேவைப்படுற ஒரு தின்பண்டத்துக்கு சேர்க்குற மாதிரி அவ்ளோ சீனி. ஒரு வழியா கெட்டியானதும் அடுப்பை நிறுத்திட்டு அதை ஒரு கிண்ணத்துல போட்டு காட்டினாங்க. அந்த மருந்தை சாப்பிட்டா பலவிதமான நோய்கள் குணமாகும்னும் பசுநெய் சேர்த்திருக்கதால சீக்கிரம் கெட்டுப் போகாதுன்னும் சொன்னாங்க. நியாயப்படி பார்த்தா அவங்க சேர்த்த நெய்யோட அளவுக்கும் சீனியோட அளவுக்கும் சர்க்கரை, ரத்தக்கொதிப்பு இன்ன பிற நோய்கள் இல்லாதவங்களுக்குக் கூட அதெல்லாம் கண்டிப்பா வந்துடும்.
இதுல இன்னொரு முக்கியமான டவுட்டு என்னன்னா ”அகத்தியர் எழுதி வச்ச மூலிகை மருத்துவக் குறிப்பு”ன்னு இதைச் சொல்றாங்க. அகத்தியர் காலத்துல எல்லாம் சீனி இருந்திச்சா? தேன், வெல்லம், பனங்கல்கண்டு, கருப்பட்டி, நாட்டுச் சர்க்கரை இதெல்லாம் தான அந்தக் காலத்துல இனிப்புக்காகச் சேர்க்குற பொருட்களா இருந்திருக்கும் ? இதுல எங்க இருந்து சீனி வந்திச்சு ??? எனக்குப் புரியல..

8 comments:

  1. முருகா...! இதென்ன சோதனை...?

    ReplyDelete
  2. காட்சியைப் பார்த்தோமா ரசித்தோமா இல்லையா என்பது பற்றி மட்டும் பேசலாம் அது பற்றிய உண்மைத்தனம் பற்றிப்பேச்சு ஹூஉம் மூச்......

    ReplyDelete
    Replies
    1. ஐயா ...வேறு ஏதேனும் ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் என்றால் வெறுமனே கடந்து விடலாம். ஆனால் இது மருத்துவக்குறிப்பு நிகழ்ச்சியாதலால் மனதுக்கு தவறெனப் பட்டதை சுட்டிக்காட்டியிருக்கிறேன்...:)

      Delete
  3. அகத்தியரை எப்படியெல்லாம் வம்புக்கு இழுக்கின்றார்கள் பாருங்கள்! வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. அகத்தியரை எப்படியெல்லாம் வம்புக்கு இழுக்கின்றார்கள் பாருங்கள்! வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ...அகத்தியரின் பாடல் ஒன்றை மேற்கோள் காட்டிச் சொல்லும்போது அவர்கள் மிகுந்த கவனமுடன் இருந்திருக்க வேண்டாமா என்பதே என் கருத்து :)

      Delete
    2. வலைச்சரத்தில் தம்பி கார்த்திக் புகழேந்தி அறிமுகப்படுத்தியிருப்பதைப் பார்த்தேன் ...மகிழ்ச்சி....

      Delete
  5. உங்களுடைய இந்தப்பதிவு இன்றைய வலைச்சரத்தில் http://blogintamil.blogspot.in/2015/07/thalir-suresh-day-7.html அடையாளம் காட்டப்பட்டுள்ளது. நேரம் கிடைக்கையில் சென்று பாருங்கள்! நன்றி!

    ReplyDelete